தமிழில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா (49). அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழில் ‘எதிரி’, ‘ஆட்டோகிராப்’ மற்றும் ‘டான்சர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2006ல் அஜித் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு மலையாளம் படங்களில் கவனம் செலுத்தி வந்த கனிகா 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கனிகா மணிரத்னம் இயக்கத்தில் 2015ல் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.
தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்துவரும் கனிகா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் கோடை விடுமுறையை கழிப்பதற்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் அவர் எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘நினைவுகூரும் வகையில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்’’ என கேப்ஷன் போட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.