குறைந்த சம்பளம் கொடுத்ததால் ஜூனியர் என்டிஆருக்கு டாடா காட்டிய டூப் நடிகர்

மும்பை, ஏப்.27: பல வருடங்களாக ஜூனியர் என்டிஆருக்கு சண்டை காட்சிகளில் டூப் போடும் நடிகரான ஈஸ்வர் ஹரிஷ் என்பவர், ‘வார் 2’ படத்தில் நான் பணியாற்றவில்லை என்கிற தகவலை தற்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜூனியர் என்டிஆரின் பல படங்களில் நான் தான் அவருக்கு டூப்பாக நடித்துள்ளேன். ‘வார் 2’ படத்தில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனின் உடலமைப்புடன் ஒப்பிடும்போது சண்டை காட்சிகளில் ஜூனியர் என்டிஆரின் உடலமைப்பு சற்று குறைவு என்பதால் அதை சமன் செய்வதற்காக அந்த படத்தில் அவருக்கு டூப்பாக நடிக்க அழைக்கப்பட்டேன்.

ஆனால் அதற்காக அவர்கள் எனக்கு வழங்குவதாக சொன்ன ஊதியம், நான் ஐதராபாத்தில் இருந்து மும்பை சென்று வரும் விமான செலவுகளுக்கே சரியாகப் போய்விடும். ஆனாலும் ஊதிய விஷயத்தில் சரியான உடன்பாடு எட்டப்படாததால் இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories: