ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கும் வெப்தொடர் ‘டார்க் ஃபேஸ்’

சென்னை: தி சூஸ்சென் ஒன் நிறுவனத்துக்காக அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ள வெப்தொடர், ‘டார்க் ஃபேஸ்’. மூத்த வழக்கறிஞர் கேரக்டரில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார். சரண் பிரகாஷ் இயக்கி இசை அமைத்துள்ளார். இதற்கு முன்பு அவர் பல படங்களுக்கு இசை அமைத்ததுடன், பல வீடியோ இசை ஆல்பங்களுக்கு இசை அமைத்து இயக்கி இருக்கிறார். அபு கரீம் இஸ்மாயில், யஷ்வந்த், சக்தி, சுனில் நடித்துள்ளனர். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்தொடரின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டார்.

சரண் பிரகாஷ் கூறுகையில், ‘மூத்த வக்கீல் ஒரு வழக்கை கையாள்கிறார். காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பை தவிர்த்துவிட்டு, கைதியின் கண்ணோட்டத்தில் வழக்கை பார்க்கும்போது, பலாத்கார வழக்கு மற்றும் தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சதி திட்டமும், மர்மமும் நிறைந்திருப்பதை உணர்கிறார். அது என்ன? பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை மூத்த வழக்கறிஞர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ‘டார்க் ஃபேஸ்’ வெப்தொடர் சொல்கிறது. 7 எபிசோடுகளும் யூகிக்க முடியாத திருப்பங்கள் கொண்டதாக இருக்கும்’ என்றார்.

Related Stories: