கடவுளையே விமர்சிக்கிறாங்க நான் விதிவிலக்கா?.. ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். அது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவெளியில் இதுவரை பேசாத நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் அது குறித்து மனம் திறந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், “நீங்கள் பொதுவாழ்வில் இருக்கும்போது எல்லாராலும் விமர்சிக்கப்படுவீர்கள். பணக்காரர் தொடங்கி கடவுள் வரை கூட அனைவருமே விமர்சிக்கபடும்போது, நான் மட்டும் என்ன விதிவிலக்கா?. நாங்கள் ஒன்றாக இருக்கும்வரை அகம்பாவத்துடனோ, டாக்சிக்காகவோ இல்லை. எங்களை விமர்சிப்பவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் குடும்பத்தை பற்றி நான் ஏதாவது சொன்னால், வேறு யாரோ ஒருவர் என் குடும்பத்தை பற்றி பேசுவார்கள். இந்தியர்களாகிய நாங்கள் கர்மாவை நம்புகிறோம். யாரும் தேவையில்லாமல் எதையும் சொல்ல வேண்டாம். ஏனென்றால் எல்லோருக்கும் தங்கை, மனைவி, தாய் இருக்கிறார்கள். என்னை யாராவது காயப்படுத்தினாலும்கூட, நான் கடவுளிடம், ‘அவர்களை மன்னித்துவிடு, நல்வழிப்படுத்து’ என்று தான் வேண்டிக்கொள்வேன்.

திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை எட்டுவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாத ஒரு முடிவை எட்டியிருப்பதாக தெரிகிறது. இரண்டு உடைந்த இதயங்களால் கடவுளின் சிம்மாசனமே ஆடிப்போகிறது என்கிறார்கள். உடைந்து போன இரண்டு துண்டுகள் மீண்டும் அதன் இடத்தை சென்று சேராது. இந்த அத்தியாயத்தை கடக்கும் வேளையில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Related Stories: