தொட்டியம், ஜூன் 13: தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி குழுமத்தில் வேளாண் பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவி விஜி என்பவர் இந்திய அளவில் நடைபெற்ற கேட் 2025 தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 105 வது இடத்தைப் பெற்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ ஐ டி ) கரக்பூரில் முதுநிலை பொறியியல் (எம்.டெக் ) நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறை (லேண்ட் வாட்டர் ரிசோர்ஸ் இஞ்சினியரிங்) படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளார்.
இதையடுத்து கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் அசோகன், வேளாண் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கோபிநாத் மற்றும் துறை ஆசிரியர்கள் மாணவி விஜியை நேரில் பாராட்டி, எதிர்கால கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த சாதனை, கல்லூரியின் உயர்தர கல்வித் தரத்தையும், மாணவர்களின் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பையும் வெளிப்படுத்துகிறது என்றும், மற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.
The post தேசிய அளவில் நடந்த கேட் தேர்வில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சாதனை appeared first on Dinakaran.