திருச்சி, ஜூலை 21: திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஏழாவது படைவீடு என திருச்சி, வயலூர் முருகன் கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி, தேவசேனா சமேதராக சுப்ரமணியசுவாமி காட்சி அளிக்கிறார். இங்கு சுவாமி தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று வயலூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மினவும் விஷேமானது, குறிப்பாக முருக பெருமானுக்கு. இந்த நாளில் விரதம் இருந்து முருகபெருமானை தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும். ஆடி கிருத்திகையை மற்றும் விடுமுறை தினம் என்பதால் நேற்று வயலூர் முருகன் கோயிலிக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
காலை முதல் வள்ளி, தேவசேனா சமேத முருகபெருமானுக்கு பஞ்சாமிரதம், பால், தயில், சந்தனம், திருநீர், போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் மங்கள பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி புறப்பட்டு திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்க அருள் சாதித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
The post வயலூர் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு appeared first on Dinakaran.
