திருவெறும்பூர் அடுத்த சூரியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவி

திருவெறும்பூர், ஜூலை 24: திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அடுத்த சூரியூர் ஊராட்சியில் உள்ள பெரியசூரியூர், சின்ன சூரியூர், வீரம்பட்டி, ஊணவயல் மற்றும் இதேபோல் கும்பக்குடி ஊராட்சியில் உள்ள கும்பக்குடி கிராமம், வேலாயுதங்குடி, அண்ணா நகர் பகுதி 2 மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய இரண்டு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் சூரியூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிற ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். திருவெறும்பூர் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் முகாமினை தொடங்கி வைத்ததுடன் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதனை அடுத்து வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த சூரியூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் சின்ன சூரியூரை சேர்ந்த பெரியசாமி, நவல்பட்டை சேர்ந்த மீனாட்சி, சின்னம்மாள் கிருஷ்ணமூர்த்தி, துவாகுடியை சேர்ந்த திருவாசகம் ஆகியோருக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணை வழங்கியதுடன், சூரியூரை சேர்ந்த செபஸ்தியார் என்பவருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையையும் வழங்கி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சூரியூரை சேர்ந்த அஞ்சளைஅம்மாள் என்பவருக்கு பயனாளி அடையாள அட்டையும் வழங்கினார்.

மேலும் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மகளிர் தொகை கிடைக்க பெறாத தகுதி வாய்ந்த அனைத்து தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடன் கூறியதோடு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.இந்நிகழ்வில் திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கங்காதரன், சூரியூர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவெறும்பூர் அடுத்த சூரியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: