திருச்சி, ஜூலை 21: திருச்சியில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடந்த 19ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த சங்கர் (41) என்பதும். அவர் அங்கு கஞ்சா விற்றதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்,
திருச்சி, பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கஞ்சா விற்ற இரண்டு சிறுவர்களை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் பெயிலில் வெளியே விட்டனர். அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை, ஆலம் தெரு அருகே கஞ்சா விற்ற பிரகாஷ் (20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
The post வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.
