திருச்சி, ஜூலை 20: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் முதல்வருக்கு தபால் நிலையத்தில் மனு அனுப்பி கோரிக்கைகளை முன் வைத்தனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கம் சார்பில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 1.32 லட்சம் மாற்றுத்திறன் கொண்ட 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பொருத்தமான கல்வி மற்றும் பெற்றோர் ஆசிரியருக்கு பயிற்சி ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உள்ளடங்கிய கல்வி பணியாளர்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது. எனவே இந்த முறை விடுபட்டவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணிவான வழங்கிட ஆணையிட்டும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் பணி ஆணை வழங்கிட வில்லை. எனவே அதை வழங்க வேண்டும், இபிஎப் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் உள்ளடங்கிய கல்வி மாற்றுத்திறன் சிறப்பு பெற்றுள்ளர்களுக்கு உறுதிப்படி 8 மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டிலும் சிறப்பு பயிற்றுநர்களை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணி நிரந்தரம் செய்து காலம் அறிவுறுத்தியும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்திலிருந்து 80 ஆசிரியர்கள் ஒன்று திரண்டு திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பினர்.
The post சிறுப்பு பயிற்றுனர் சங்கத்தினர் திருச்சி தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு மனு appeared first on Dinakaran.
