டிஎன்பிஎல்.ன் பசுமை உற்பத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காப்பியர் பேப்பர் அறிமுகம்

வேலாயுதம்பாளையம், ஜூலை 22: தமிழ்நாடு காகித ஆலை சார்பில் பசுமை உற்பத்தி – டிஜிட்டல் புதுமையான தொழில்நுட்பத்தில் காப்பியர் பேப்பர் அறிமுகவிழா நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் காகிதம் தயாரிப்பில் ஒரு முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வாடிக்கையாளர் சந்திப்பு – 2025 மற்றும் மேம்படுத்தப்பட்ட நகல் எடுக்கும் காகிதம் அறிமுக விழா காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந்தீப் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.

இந்தசந்திப்பில் காகிதம் மற்றும் சாத்தியக்கூறுகள் என்ற தலைப்பில் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்களின் உறவை வலுப்படுத்துவதற்கும், புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கும் மற்றும் காகித துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.இந்நிகழ்வில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் புதிதாக மேம்படுத்தபட்ட நகல் எடுக்கும் காகிதம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக செயலியை நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்தீப் சக்சேனா அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய நகல் எடுக்கும் காகிதம் சிறந்த செயல்திறன் மற்றும் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தரமான காகிதங்களை வழங்குவதில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது என்பதை நிரூபிக்கிறது.மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி பற்றிய செயல் முறைகள் ஆகியன விரிவாக நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் புதிய உயரங்களை தொடுதல் என்ற தொலைநோக்கு பார்வையுடன் பசுமை உற்பத்தி மற்றும் டிஜிட்டல் ஈடுபாட்டில் அதன் புதுமையான முன்னேற்றங்களை எடுத்துக்காட்டியது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post டிஎன்பிஎல்.ன் பசுமை உற்பத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காப்பியர் பேப்பர் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: