திருச்சி, ஜூலை 22: திருச்சி மாவட்ட கலெக்டர் அலு வலகம் சார்பில் வெளியிட ப்பட்டுள்ள செய்திகுறிப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்ட த்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளு க்கான போட்டித் தேர்வுக ளுக்கு இலவச பயிற்சி வகு ப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் விதமாக மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித்தேர்வுகளுக்கான (டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, எல்ஐசி, ஏஏஓ, ஐபி, இபிஎம்ஓ, ஏஎஸ்எஸ்டி, கமாண்ட ண்ட்) போன்ற துறைகளின் பணிக்கு, பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல், நடப்பு நிக ழ்வுகள்,) நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல் மொழியறிவு (தமிழ், ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வரும் 28ம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங் உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாட ப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும், எனவே திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
The post போட்டி தேர்வர்களுக்கு ஜூலை 28ல் பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.
