பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்: காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூர், ஜூன் 11: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 110 சிறப்பு நூலகங்கள் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளில், தமிழக அளவில் 20 அரசு மருத்துவமனை வளாகங்கள், 50 பொது இடங்கள் என 70 சிறப்பு நூலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வி மற்றும் பொது நூலகத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் துறைசெயலர், இயக்குனர்கள் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு துறையூர் சாலையில் அமைந்துள்ள, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் 500 புத்தகங்களுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் குத்து விளக்கேற்றி வைத்து நூல்களை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலா வல்லபன், அட்மா தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் மணிமேகலை வரவேற்றார். இதில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவர் டாக்டர் சரவணன், இந்திய தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரன், டாக்டர் விஜயன், ரத்தப் பரிசோதனை அலுவலர் வசந்த், நூலக கணக்காளர் சுரேஷ், தட்டச்சர் ராணி, 3ஆம் நிலை நூலகர் விஜயகுமார், முருகன் பவித்ரன் மற்றும் அலுவலக உதவியாளர் ராமன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்: காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: