பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு கூட்டம்

பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டகுழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம் துறைமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, மாவட்ட துணைச் செயலாளராக சந்திரன், துணைத் தலைவர் சத்தியசீலன், இணையதள பதிவு இளையகுமார் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில், சட்ட ஆலோசகர் காமராசு, மாவட்டத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் கோகுல கிருஷ்ணன், பொருளாளர் அன்புச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சத்தியசீலன், சந்திரன், ராமச்சந்திரன், அறிவழகன், பரமசிவம், செல்லதுரை, பரசுராமன், பாப்பாத்தி, ராஜம்மாள், இளையகுமார், குமார், திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: