பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூரில் காவல்நிலையங்களில் பணிபுரியும் சிசிடிஎன்எஸ் காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு நவீன இயந்திரங்கள் மூலம் குற்றவாளிகளின் விரல்ரேகைகளை எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் சிசிடிஎன்எஸ் காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் பற்றியும், அவற்றை உபயோகிப்பது பற்றியும், காவல்நிலையங்களில் பணிபுரியும் சிசிடிஎன்எஸ் காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் (தலைமையிடம்) மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகப்பிரியா, விரல்ரேகை பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post சிசிடிஎன் காவலர்கள், எழுத்தர்களுக்கு கணினி இயந்திரம் பயன்படுத்தி விரல்ரேகை பதிய பயிற்சி வகுப்பு: அரியலூர் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
