பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூரில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) பெரம்பலூர் மாவட்ட மாநாடு புது பஸ்டாண்டு அருகே அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (20ம் தேதி) நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி சங்க கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிஐடியூ மாநிலச் செயலாளர் ஜெயபால் துவக்கவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அகஸ்டின் வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் வரவு -செலவு அறிக்கை வாசித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியூ மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார்.
இந்த மாநாட்டில், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காண்ட்ராக்ட் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். காண்ட்ராக்ட் தொழிலார்களை நிரந்தரப்படுத்தும் வரை, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தற்போது இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆட்டோக்களாக மாற்றம் செய்ய செலவுத்தொகை தர வேண்டும். புதிய ஆட்டோ வாங்க வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். பெரம்பலூரில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு இடையூறாக இருக்கும் புதிய பஸ்டாண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்கவேண்டும் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளையும், சிமெண்டு, ஸ்டீல், பெயிண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் மணிமேகலை, பெரியசாமி, ஆறுமுகம், புவனேஸ்வரி மற்றும் மாவட்டகுழு உறுப்பினர்கள், சிஐடியூ நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் செல்வி நன்றி கூறினார்.
ரூ.3,500 முதல்…
பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ. 1,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல், இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலை ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் விநாயகர் சிலைகளின் வடிவமைப்பை பார்த்து ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.
The post பெரம்பலூரில் சிஐடியூ மாவட்ட மாநாடு ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும் appeared first on Dinakaran.
