வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

குன்னம், ஜூலை 21: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயலப்பாடி ஊராட்சி வ.கீரனூர், வீரமநல்லூர் ஆகிய கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊரில் புகழ்பெற்ற வையக்கரை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குலதெய்வ பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

வயலப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் செல்லவும், சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி செல்லவும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டும். ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில், மழைக்காலங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அருகில் உள்ள கடைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து வயலப்பாடி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்துத் தர பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

குவியும் ஆர்டர்கள் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், மழைக்காலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்க முடியாது என்பதால், கோடை காலங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு, ஆகியவற்றால் விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகிறது. இவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. இங்கு விற்பனைக்கு உள்ள சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாக்குழுவினர் வாங்கி செல்ல ஆர்டர் குவிந்து வருகின்றன என்று கூறினர்.

நவராத்திரி கொலு பொம்மைகள்
விநாயகர் சதுர்த்திக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிந்ததும் இவர்கள் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி துவங்கி அசத்தி வருவார்கள். பல்வேறு வடிவங்களில் அரை அடி முதல் ஐந்தடி வரை பொம்மைகள் தயாரிக்கின்றனர். இதன் மூலம் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

The post வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: