பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம், பூலாம்பாடி பேரூராட்சியில் 9வது வார்டு முதல்15 வது வார்டு வரை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 551 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு, பொது மக்கள் வழங்கும் மனுக்களை பார்வையிட்டு, மனுக்கள் குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனை வழங்கி, முதல் நாளிலேயே தீர்வு காணப்பட்ட மனு தாரர்களுக்கு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வேப்பந்தட்டை வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சுகுணா, பூலாம்பாடி பேரூராட்சித் தலைவர் பாக்கியலட்சுமி, பேரூராட்சி துணை தலைவர் செல்வலட்சுமி, செயல்அலுவலர் ருக்மணி, பேரூராட்சி எழுத்தர் மணி மேகலை மற்றும் திமுக வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பாலகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
The post பூலாம்பாடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ நலத்திட்ட உதவி வழங்கினார் appeared first on Dinakaran.
