ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியின் 42 நிமிடத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு ஜான்சன் ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது.
* ஹம்பர்க் ஓபன்: ஸ்வெரவ் தோல்வி
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தொடரின் முதல் நிலை வீரரும், டென்னிஸ் உலகின் 3ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) பரிதாபமாக தோற்று வெளியேரினார். அவர் 40வது நிலை வீரரான, பிரான்சின் அலெக்சாண்டர் முல்லரிடம் 2 மணி 40 நிமிடங்கள் போராடி 3-6, 6-4, 6-7(5-7) என்ற செட்களில் தோற்றார். ஸ்வெரவ் 2023ம் ஆண்டு ஹம்பர்க் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர்.
* அயர்லாந்திடம் அடங்கிய வெ.இ
அயர்லாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கு தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் டப்ளின் நகரில் நடந்தது. முதலில் விளையாடி அயர்லாந்து 303 ரன் எடுத்தது. ஆன்டி பால்பிர்னி 112 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் இன்று டப்ளினில் நடக்கும்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.