தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் 35 (22பந்து), ஜேகப் பெதேல் 36 (16பந்து) ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். அதனால் இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 3விக்கெட் மட்டும் இழந்து 248 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அகேல் ஹோசின், குடகேஷ் மோதி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு தலா ஒரு விக்கெட் மட்டும் எடுத்தனர். அதனையடுத்து 249 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன் மட்டுமே விளாசியது. அதனால் இங்கிலாந்து 37 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் வென்று டி20 தொடரை கைப்பற்றிவிட்ட இங்கிலாந்து, 3வது ஆட்டத்திலும் வென்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்திருந்தது.
The post ஒயிட்வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ்: இங்கிலாந்து அணி அபாரம்; 3வது டி20 போட்டியில் 37 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.