இப்போட்டியில் சீனாவை சேர்ந்த வீராங்கனை ஸிபெய் வாங், 252.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தென் கொரியாவை சேர்ந்த குவோன் யுஞ்சி, 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவை சேர்ந்த வருண் தோமர், இறுதிச் சுற்றில், 160.3 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தை பெற்றார். இதற்கு முன், டோக்கியோ, பாரிஸ் நகரங்களில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறாத இளவேனில் அதன் பின்னர் பெற்ற தொடர் பயிற்சிகளின் காரணமாக, நேற்று நடந்த போட்டியில் துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
The post துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை: வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்; தமிழக வீராங்கனை அசத்தல் appeared first on Dinakaran.