குவீன்ஸ் கிளப் டென்னிஸ்: எகிறி அடித்த எம்மா ராடுகனு; 2வது சுற்றுக்கு தகுதி

லண்டன்: குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் மகளிர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். பிரிட்டன் தலைநகர் லண்டனில், குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன. அதில், ரஷ்யாவை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீராங்கனை டயானா ஸ்னெய்டர், போலந்தை சேர்ந்த மேக்தலேனா ஃப்ரீச் உடன் மோதினார். இப்போட்டியில் அபாரமாக ஆடிய டயானா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புக்ஸா உடன் மோதினார். இப்போட்டியில், எம்மா, எவ்வித சிரமமும் இன்றி, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு போட்டியில் ஸ்லோவக் வீராங்கனை ரெபேக்கா ஸ்ரம்கோவா, செக் நாட்டை சேர்ந்த பார்பரா கிரெஜோகோவா உடன் மோதினார். இந்த போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட ரெபேக்கா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லர், பிரிட்டனை சேர்ந்த பிரான்செஸ்கா ஜோன்ஸ் உடன் மோதினார். அசத்தலாக ஆடிய கெஸ்லர், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

The post குவீன்ஸ் கிளப் டென்னிஸ்: எகிறி அடித்த எம்மா ராடுகனு; 2வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: