லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா, 18 பந்துகளில் அரை சதம் விளாசினார். ஏதாவது ஒரு அணிக்காக அதிக முறை அரை சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், சன்ரைசர்ஸ் அணிக்காக 4 முறை அரை சதங்கள் விளாசி அபிஷேக் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
தற்போது லக்னோ அணியில் உள்ள நிக்கோலஸ் பூரன், டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்குர்க் ஆகியோர், 20 பந்துகளுக்குள் 3 முறை அரை சதம் அடித்துள்ளனர். இவர்கள், இந்த சாதனைப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளனர். அதே சமயம், ஒட்டு மொத்த ஐபிஎல் தொடர்களை கணக்கிட்டால், அதிக முறை 20க்கும் குறைவான பந்துகளில் 4 முறை அரை சதம் கடந்த வீரர்களாக, அபிஷேக் சர்மாவும், நிக்கோலஸ் பூரனும் முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.
The post 20க்குள் 50 ரன்கள்: அசத்திய அபிஷேக் appeared first on Dinakaran.