மயிலம்பாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

 

பவானி, மே 3: பவானி ஊராட்சி ஒன்றியம் மயிலம்பாடி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் விஷ்ணு நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊர்நல அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். இக்கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினர்.

2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும், இணையவழி மூலம் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்கள் இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலம்பாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: