ரூ.1.55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி, மே 17: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 38 மூட்டை கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.185.40க்கும், அதிகபட்ச விலையாக ரூ.190.49க்கும், சராசரி விலையாக ரூ.187.69க்கும். 2ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.122.90க்கும், அதிகபட்ச விலையாக ரூ.170.10க்கும், சராசரி விலையாக ரூ.157.89க்கு ஏலம் போனது. மொத்தமாக 937 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 463க்கு விற்பனை நடந்தது.

The post ரூ.1.55 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: