ஈரோடு, மே 10: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமமிட்டு, மடிப்பிச்சை ஏந்தி நூதன போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிமேகலை, முருகன், செல்வி, சபானா ஆஷ்மி, சுப்புலட்சுமி, சித்ராதேவி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், தேர்தல் கால வாக்குறுதியின்படி சிறப்பு பென்ஷன் ரூ. 6,750 வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2.57 காரணியால் பென்ஷன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதி எண் 313ன்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பட்டை, நாமமிட்டு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம் appeared first on Dinakaran.