கொடுமுடி வட்டத்தில் ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

 

ஈரோடு, மே 10: ஈரோடு மாவட்டம், கந்தசாமிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரேஷன் கடை 834 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இக்கடையில் இருந்து 204 குடும்ப அட்டைகளை பிரித்து களிப்பாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. அந்தக் கடைக்கு ஊர் பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதனை அமைச்சர் முத்துசாமி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.

தொடர்ந்து, இச்சிபாளையம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இச்சிபாளையம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்பி பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கொடுமுடி தாசில்தார் முருகாயி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கொடுமுடி வட்டத்தில் ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: