இந்த மாதம் ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு ஐகோர்ட் சார்பில் வழியனுப்பு விழா: ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தல் நீதிபதிகளாக பணியாற்றி இந்த மாதம் ஓய்வு பெறவுள்ள 5 நீதிபதிகளுக்கு நேற்று உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. சென்னை உயர்மன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் மே மாதம் 5 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். நீதிபதி ஆர்.ஹேமலதா ஏப்ரல் 30ம் தேதியும், எஸ்.எஸ்.சுந்தர் மே 2 தேதியும், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் மே 9ம் தேதியும், நீதிபதி வி.பவானி சுப்பராயன் மே 16ம் தேதியும் நீதிபதி வி.சிவஞானம் மே 31ம் தேதியும் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக குறைகிறது. 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கும்.ஓய்வு பெறும் ஐந்து நீதிபதிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவு உபச்சார உரையாற்றினார். அவர் பேசும்போது, 5 நீதிபதிகளின் பணி, அவர்கள் விசாரித்து தீர்த்து வைத்த வழக்குகள் குறித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.முத்துக்குமார், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், ஓய்வு பெறும் நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இறுதியில் ஓய்வு பெறும் 5 நீதிபதிகளும் ஏற்புரையாற்றினர். அவர்கள் பேசும்போது, தங்களுக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post இந்த மாதம் ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு ஐகோர்ட் சார்பில் வழியனுப்பு விழா: ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: