ஊட்டி : ஊட்டி படகு இல்ல சாலை நடைபாதை ஒரத்தில் உள்ள தடுப்புகளில் இரும்பு கம்பி அலங்காரங்கள் அமைக்கப்படாமல் உள்ளதால் பொலிவின்றி காட்சியளிக்கிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்புறமும் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. இதில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.
இந்நிலையில் படகு இல்ல சாலையோர நடைபாதை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நடைபாதையில் சேதமடைந்த அலங்கார கற்கள் அகற்றப்பட்டு புதிய கற்கள் பதிக்கப்பட்டது. மேலும் ஓரத்தில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இவற்றில் பல இடங்களில் இரும்பு அலங்கார கம்பிகள் அமைக்கப்படாமல், அமைக்கப்பட்ட சில இடங்களில் இந்த அலங்கார கம்பிகள் திருடு போயுள்ளன. இதனால் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி அலங்கார தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post ஊட்டி படகு இல்ல நடைபாதை ஓர தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.