இந்திய அளவில் தமிழக சுற்றுலாத்துறை முதன்மை மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சென்னை: இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழக சுற்றுலாத்துறை திகழ்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்ச்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இவ்வகை சுற்றுலாக்கள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய அளவில் தமிழக சுற்றுலாத்துறை முதன்மை மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: