அடையாளம் தெரியாத முதியவர், மூதாட்டி மரணம்: போலீசார் விசாரணை

கரூர், ஏப். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு திரையரங்கம் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக இந்த பகுதி விஏஒ வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதியவரை போலீசார், மீட்டு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த சம்பவம் குறித்து விஏஒ புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள பேரூந்து நிறுத்தம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து இந்த பகுதி விஏஒ வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

The post அடையாளம் தெரியாத முதியவர், மூதாட்டி மரணம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: