கிருஷ்ணராயபுரம், மே 8: கிருஷ்ணராயபுரம் அருகே காவேரி கதவணை பகுதியில் பைக் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பி.தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சிவராஜ் (37). இவர் தனது தங்கையின் மகன் பாலமுருகன் (5) என்பவரை தனது பைக்கில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மே-4ம் தேதி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் – காட்டுப்புத்தூர் சாலையில் கதவணை பகுதியில் செல்லும்போது எதிரே தொட்டியம் அருகே உனியூர் பெரியபள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (29) என்பவர் ஓட்டி வந்த ஓம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சிவராஜ் மற்றும் சிறுவன் பாலமுருகன் அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகாரின் பேரில் மாயனூர் போலீசார், மணிவாசகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post அதிகாரிகள் நேரில் ஆய்வு கிருஷ்ணராயபுரம் அருகே ஆம்னி கார் மோதி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.