கரூர், மே 7: கருர் அருகே மாவட்ட மதுவிலக்கு போலீசார்களின் வாகன தணிக்கை சோதனையின் போது, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்கள் கார் மூலம் கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், எஸ்பி உத்தரவின்பேரில், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்காலியூர் அருகே கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, கரூர் சேலம் பைபாஸ் சாலையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கரூர் சுக்காலியூரைச் சேர்ந்த சதீஸ் கண்ணன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில், பாண்டிச்சேரியில் இருந்து ரூ.51 ஆயிரத்து 900 மதிப்புள்ள 233 மதுபான பாட்டில்களை கடத்தி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதனடிப்படையில், வீட்டில பதுக்கி வைத்திருந்த மதுபாட்டிகள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மதுபானத்தை கடத்தி வந்த நபரை போலீசார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.
The post கருர் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் பிடிபட்டன appeared first on Dinakaran.