கரூர், மே 8: க.பரமத்தி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் மற்றும் காலி வலசு ஆகிய பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணத்தை பறித்து சென்றது சம்பந்தமாக க.பரமத்தில் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, தங்கரத்தினம், ஜெயசூர்யா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்பி பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, இரண்டு பேர்களும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருசசி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.