குளித்தலை ஏப். 29: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பனேஸ்வரர் காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஆறுமுகப்பெருமானுக்கு சன்மார் தவயோகி வெள்ளையம்மாள் அருள் ஆசியுடன் 54 ஆம் ஆண்டு நடத்தும் 108 காவடிபால்குடம் மற்றும் தீர்த்த குடம் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வான காவிரி நதிக்கரையில் இருந்து 108 காவடிகள் மற்றும் தீர்த்த குடம் பால்குடம் எடுத்தனர். இதனையடுத்து 108 காவடிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குளித்தலை முக்கிய வீதி வழியாக மேளதாளங்கள் முழங்க விராலி மலைக்கு வாகனங்கள் மூலம் பக்தர்கள் காவடி சுமந்தபடியே சென்றனர். இதில் வைர பெருமாள் பட்டி. திம்மம்பட்டி, சிவாயம் மேலப்பட்டி, அய்யர்மலை, குப்பாச்சிபட்டி, மத்திபட்டி, அறப்பளிப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி மற்றும் பல பகுதி கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
The post காவடி தீர்த்த குடம் பால்குடம் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.