அரவக்குறிச்சி, மே 6: பள்ளப்பட்டி நகராட்சியில் வெறிநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வீட்டில் வளர்த்து வரும் ஆடு, கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பள்ளபட்டி நகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் பெரியவர்கள் துணை இல்லாமல் சிறுவர்கள் ரோட்டில் நடந்து சென்றால் அவர்களை வெறிநாய்கள் கடித்து விடுகிறது. இதனால் குழந்தைகள் அச்சத்துடனேயே சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. வெறி நாய்களின் அட்டகாசத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளப்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
The post பொதுமக்கள் வலியுறுத்தல் பள்ளப்பட்டி நகராட்சியில் வெறி நாய்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.