கரூர், மே 6: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. .தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த முகாமிற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருக்கும். தற்போது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிராம கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் காரணமாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வழக்கத்தை விட குறைவான மக்களே வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று மக்கள் வரத்தின்றி வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது.
The post கோயில்களில் சித்திரை திருவிழா குறைதீர் கூட்டத்திற்கு குறைவான மக்கள் வருகை appeared first on Dinakaran.