அரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம் ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும் அதே பள்ளி தற்காலிக ஆசிரியையான அவரது மனைவி ஆகியோர் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சரோஜினி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆசிரியர் சுதாகர் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். இந்நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மலைவாசன் விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியை சரோஜினி மற்றும் ஆசிரியர் சுதாகர் ஆகியோரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து, தலைமை ஆசிரியை சரோஜினியை வெங்கிளி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், ஆசிரியர் சுதாகரை உதயேந்திரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.

The post அரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம் ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: