அப்போது இடையர்வலசை கிராமத்தில் நள்ளிரவு ஒரு கும்பல் கடத்தல் பொருட்களை கடத்த தயார் நிலையில் இருந்தது. அப்போது போலீசார் அவர்களை விரட்டிச் சென்ற பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து பெரிய பார்சல் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். போலீசார் பார்சலை சோதனை செய்தபோது, 176 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.17 லட்சம். கைதானவர்கள் வேதாளை வலையர்வாடி பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(22), காமேஷ் (24), கண்ணன் (35) ஆகியோர் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
The post இலங்கைக்கு கடத்த முயற்சி 176 கிலோ கஞ்சா பறிமுதல். appeared first on Dinakaran.