இந்நிலையில் ரூ.92 லட்சம் கடன் பெற்ற இலக்கியன், விஜய் ஆனந்துக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே கமிஷன் தொகையாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், ஒப்புக்கொண்டபடி ரூ.10லட்சம் கமிஷன் வேண்டுமென இலக்கியனை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 9ம்தேதி கிளினிக் சென்ற இலக்கியன் இரவில் வீடு திரும்பவில்லை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இலக்கியனை 5 பேர் ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது.
தீவிர விசாரணையில், விஜய்ஆனந்த், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மணிகண்டன்(45), ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சந்திரரூபன்(26), சங்கர்(45), ஒரத்தநாடு தர்மசீலன்(35) ஆகியோர் சேர்ந்து இலக்கியனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிள்ளையார்பட்டி ரவுண்டானா பகுதியில் பதுங்கியிருந்த விஜய் ஆனந்த் உட்பட 5 பேரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்து இலக்கியனை மீட்டனர்.
The post ரூ.92 லட்சம் கடன் வாங்குவதற்கு உதவி; ரூ.10 லட்சம் கமிஷன் தராத சித்த மருத்துவர் கடத்தல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.