நெல்லை: நெல்லை மாவட்டம், பணகுடி பகுதி கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினார்.தகவலறிந்து எஸ்பி சிலம்பரன் மற்றும் பணகுடி போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மூதாட்டி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபரை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பைக்கில் தப்பிய வாலிபர் காட்டுப்பகுதி வழியாக செல்வது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பணகுடி காட்டுப்பகுதியில் நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கில் தப்பிச் சென்றார். போலீசார் விரட்டிச் சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், காவல்கிணற்றை சேர்ந்த லட்சுமணன் (25) என்பது தெரிய வந்தது. அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post 60வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகை பறித்த 25 வயது வாலிபர்: போலீசார் விரட்டிய போது கை முறிந்தது appeared first on Dinakaran.