இதுகுறித்து தகவலறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இப்புகாரின்பேரில் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு (பொறுப்பு) ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், ராஜு, தலைமை காவலர்கள் யாசர் அராஃபத், மணிகண்டன், அஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 2 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.
இதையடுத்து சிசிடிவி காமிரா பதிவான பைக் பதிவெண்ணை வைத்து, அந்த 2 மர்ம நபர்கள் சென்ற வழித்தடத்தை பின்தொடர்ந்து, ஜமீன் பல்லாவரத்தில் நேற்று நள்ளிரவு வழிப்பறியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் செம்மஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஹரிஹரன் (21), முஹம்மது அஸ்லாம் (25) எனத் தெரியவந்தது. இதில் ஹரிஹரன், பிரபல கானா பாடகர் என்பதும், இவர் கடந்த 2020ம் ஆண்டு சமூக வலைதளங்களில் கானா ஹரி என்ற பெயரில் கணக்கு துவங்கி, இதில் லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும், சம்பவ தினத்தன்று கானா பாடகர் ஹரியும் அவரது நண்பர் முஹம்மது அஸ்லாமும் ராஜீவ் காந்தி சாலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மதுபோதையில் வீடு திரும்பியுள்ளனர். நடுவழியில், கூடுதல் மது அருந்துவதற்கு கையில் பணம் இல்லாததால், ஐடி ஊழியரை கத்திமுனையில் மிரட்டி வெள்ளி பிரேஸ்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்றுள்ளனர் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரிடம் இருந்து வெள்ளி பிரேஸ்லெட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட கானா பாடகர் ஹரிஹரன், நண்பர் முஹம்மது அஸ்லாம் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சோழிங்கநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: பிரேஸ்லெட், கத்தி பறிமுதல் appeared first on Dinakaran.