தேவகோட்டை: சமூக வலைதளத்தில் பழகிய வாலிபர்களுடன் தகாத உறவு வைத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மேலூர் வாலிபர் கைதானார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்ணீர் இல்லாத கிணற்றில் கடந்த 14ம் தேதி பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் இளம்பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் தந்தை இறந்தவுடன், அவரது தாய் 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தந்தை வழி பாட்டி வீட்டில் தங்கிய இளம்பெண் சமூக வலைத்தளம் மூலம் சிலருடன் நெருங்கிப் பழகியதில் கர்ப்பமானதும் இதனால் பயந்துபோய் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த அதிரதன்(29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வலைத்தள நண்பர்களுடன் தகாத உறவால் கர்ப்பம் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.