சென்னை, ஏப்.9: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 28ம் தேதி சிஎஸ்கே-ஆர்சிபி இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 20 செல்போன்கள் திருட்டு போனதாக சென்னை சிங்கம் ஐபிஎல் செயலி மூலம் புகார்கள் பெறப்பட்டது. விசாரணையில் செல்போன் திருடிய ஜார்கண்ட் மாநிலம் தின்பஹார் கிராமத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர்வேலூர் மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரிந்தது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் ராஜ்குமார் (22), ஆகாஷ் நோகியா (23), விஷால் குமார் மாட்டோ(22), கோலிந்த் குமார் (21) ஆகியோர் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களிடமிருந்து 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேற்படி கும்பல் சிறு சிறு குழுக்களாக பிந்து தின்பஹர் கிராமத்தில் இருந்து நபர்களை திருட்டு தொழிலில் ஈடுபடுத்த தினக்கூலி ரூ.1000 என்ற அடிப்படையில் அழைத்து வந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த கும்பலை சேர்ந்த ராகுல் குமார் (24), ஜிதர சனி (30), பிரவீன் குமார் மாட்டோ (21) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்ட 2 கும்பலில் மொத்தம் 11 நபர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post திருட தினமும் ரூ.1000 கூலி: 11 பேர் கைது, 74 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.