சென்னை, ஏப்.9: ராயப்பேட்டை பகுதியில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்று வந்த அதிமுக வட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராயப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு நேரங்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி பதுக்கி வைத்து, டாஸ்மாக் கடை மூடிய பிறகு 180 எம்எல் பாட்டிலுக்கு எம்ஆர்பியை விட கூடுதலாக ரூ.50க்கும் மதுபானங்கள் ராயப்பேட்டை சோமையப்பன் தெருவை சேர்ந்து 118வது அதிமுக இளம்பெண்கள் பாசறை வட்ட செயலாளர் சூர்யா (20) என்பவர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அவரது வீட்டில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக அதிமுக வட்ட செயலாளர் சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
The post ராயப்பேட்டை பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்ற அதிமுக வட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.