பெரம்பூர். ஏப்.12: சென்னையில் அவ்வப்போது சாலையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடு போவது தொடக்கதையாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே செம்பியம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடு போனது. தற்போது பெரம்பூர் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் இருந்த பேட்டரிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் முகமது இஸ்மாயில் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா (36). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த 5000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரி திருடு போயிருந்தது. இதேபோல், பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (34) என்பவரது ஆட்டோவில் இருந்த பேட்டரி மற்றும் பெரம்பூர் கார்பென்டர் தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் (30) என்பவரது ஆட்டோவில் இருந்த பேட்டரிகளும் திருடுபோனது. இதுகுறித்து 3 ஆட்டோ ஓட்டுநர்களும் செம்பியம் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
The post சாலையில் நிறுத்தியிருந்த 3 ஆட்டோக்களில் பேட்டரி திருட்டு appeared first on Dinakaran.