எம்எல்ஏ நிதி ரூ.30 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பு தொடக்கம்

 

பெரம்பூர், ஏப்.10: வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை கீழ் மட்டத்திலிருந்து மேலே உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான குளம் ஏற்கனவே தூர்வாரப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் குளத்தை சீரமைக்கும் பணிகளுக்கான பூஜை நடந்தது.

சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கலந்துகொண்டு கோயில் குளத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். கோயில் குளத்தை சுற்றி நடைபாதை அமைத்தல் மற்றும் கழிவறை, குளியலறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.இதில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் ஆனந்தி, பகுதி திமுக செயலாளர் ஜெயராமன், வட்ட செயலாளர் முருகன், கோயில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம் கலந்துகொண்டனர்.

The post எம்எல்ஏ நிதி ரூ.30 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: