சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களை ஊக்கப்படுத்தித் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற பயம் வேண்டாம்; இது இன்னொரு தேர்வு அவ்வளவுதான் என அவர் கூறினார்.