27 மாதங்களாக யானைகள் இறப்பு நிகழவில்லை – ரயில்வே

சென்னை: பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு ஏதும் நிகழவில்லை: உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 9 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறிய சென்சார் கேபிள்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது. தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post 27 மாதங்களாக யானைகள் இறப்பு நிகழவில்லை – ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: