தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. நாமக்கல் மாநகராட்சி அரசாணை எண்.105, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்.10.08.2024ன்படி, நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 12.08.2024 முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நாமக்கல் மாநகராட்சியில் 58795 செத்துவரி விதிப்புகள் உள்ளது. நாமக்கல் மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்துவரி வசூலில் தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் இம்மாநகராட்சி 22ஆம் இடத்தில் இருந்தது.

பின்பு சொத்துவரி வசூலில் படிப்படியாக முன்னேற்றம் செலுத்தி கடந்த நவம்பர்-2024 முதல் நடப்பு நிதியாண்டின் இறுதி வரை (31.03.2025) மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மேலும், 15வது மத்திய நிதிக்குழு மானிய தொகையினை விடுவிக்க இம்மாநகராட்சிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட சொத்துவரி வசூல் இலக்கு ரூ.14.74 கோடியினை கடந்த 11.03.2025 அன்று அடைந்து நாமக்கல் மாநகராட்சி நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு மானியத் தொகை பெற தகுதியான மாநகராட்சியாக உள்ளது. கடந்த ஆண்டு மேற்கண்ட இலக்கினை அடைய இயலாததால் 15வது மத்திய நிதிக்குழு மானியத் தொகையினை பெற இயலவில்லை.

சொத்துவரி தவிர்த்து பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வசூலிலும் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. மேலும், மேற்கண்ட இனங்களுடன் குடிநீர் கட்டணம். காலிமனை வரி, தொழில் வரி, திடக்கழிவு சேவை கட்டணம் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கான மொத்த வசூலில் (Overall Collection) 2024-2025ஆம் நிதியாண்டில் நாமக்கல் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. மேற்கண்ட இலக்கினை அடைய உதவிய மாநகர பொது மக்களுக்கும்.

மேயர் மற்றும் துணை மேயர் அவர்களுக்கும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்து மாநகர அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்ப்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் சமர்ப்பித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: