சென்னை: சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபடும் கண்காணிப்பு குழுவினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்தால் உடனே வாக்கி டாக்கி மூலம் சம்மந்தப்பட்ட தூய்மை ஆய்வாளர், மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ரோந்து பணியில் சாலை செண்டர் மீடியன், சாலையோரம் அதிக மண் சேர்க்கை இருந்தால் உடனே தகவல் தெரிவித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பேருந்து நிழற்குடை சேதம், போஸ்டர் ஒட்டப்பட்டு இருத்தல், குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்
மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கழிவறைகளில் கதவுகள் உடைந்து இருந்தால், சுகாதாரமற்று இருந்தால் தெரிவிக்க வேண்டும்
நீர் நிலைகள், ஆறுகள், பக்கிங்காம் கால்வாய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குப்பை, கட்டுமானக் கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும். தொடர் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரோந்து கண்காணிபுக் குழுவானது வாகன பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபடும் கண்காணிப்பு குழுவினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.